நல்லதொரு தகவல் இதை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நல்லது எனவே அனைவரும் இந்த விசையத்தில் அதிக கவனம் செலுத்தவும்.
வீட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் நீர்த்தேக்க தொட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொட்டை மாடியில் அமைக்கப்படும் இவை வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்து வேலையை எளிமையாக்குகின்றன. பெரும்பாலும் வாஸ்துமுறைப்படி நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கு நிறையபேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் நீர்தேக்க தொட்டி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் கட்டுமானம் குறித்த முக்கிய விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.
* மொட்டை மாடியின் தரைத்தளத்துடன் இணைந்தபடியே சிலர் தண்ணீர் தொட்டியை அமைக்கிறார்கள். அப்படி அமைக்கக்கூடாது. ஏனெனில் தண்ணீரின் மொத்த எடையும் கான்கிரீட் தளத்தின் மீது இறங்கும். பொதுவாக 500 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் தேக்கும் அளவுக்கு தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. தண்ணீர் பார்ப்பதற்கு எடை குறைவாக இருப்பது போல் தோன்றும். ஒரு லிட்டர் தண்ணீரின் எடை ஒரு கிலோ என்று கணக்கிட்டாலும் 500 கிலோ எடையை தண்ணீரை தொட்டி சுமந்திருக்கும். இந்த பாரம் முழுவதையும் கான்கிரீட் தளத்தின் மீது ஏற்றுவது கட்டுமானத்துக்கு நல்லது கிடையாது.
* தண்ணீர் தொட்டி வைப்பதற்கு முடிவு செய்துவிட்டால் உடனே மொட்டைமாடி தளத்தில் சில அடி உயரத்துக்கு கான்கிரீட் தூண் எழுப்பிவிட வேண்டும். அந்த உயரங்கள் சரிசமமாக இருக்கும்படி கணக்கிட்டு அதனை சூழ்ந்து தொட்டி அமைப்பதற்கு ஏதுவாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். அந்த கான்கிரீட் கலவை நீர் கசிக்கு இடம் கொடுக்காதவகையில் வலுவானதாக இருக்க வேண்டும்.
* பின்னர் கான்கிரீட் தளத்தின் நான்கு பகுதிகளிலும் தண்ணீர் தேக்குவதற்கு ஏற்ற வகையில் சுவர் எழுப்ப வேண்டும். வீட்டின் தண்ணீர் தேவையை கணக்கிட்டு போதுமான அளவுக்கு தேக்கி வைக்கும் வகையில் திட்டமிட்டு தொட்டியை அமைக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி கான்கிரீட் தூண், கான்கிரீட் கலவை வலுவானதாக அமைந்திருக்க வேண்டும்.
* சிலர் கான்கிரீட் தரத்தின் வலிமையை கணக்கில் கொள்ளாமல் தண்ணீர் தொட்டியின் கொள்ளளவை அதிகரித்து விடுவார்கள். இதுவும் கட்டுமான வலிமையை கேள்விக்குறியதாக மாற்றிவிடும்.
* தொட்டி அமைப்பதற்கு கான்கிரீட் தூண் அமைக்கும் விஷயத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. சிலர் மொட்டை மாடியின் மூலைப்பகுதியில் தொட்டி அமைக்கும்போது அங்கு இருக்கும் பக்கவாட்டு சுவரை தூணாக மாற்றி விடுவார்கள். அதனால் கான்கிரீட் தூண் அமைக்கும் செலவு குறையும் என்று கணக்கிடுவார்கள். நான்கு கான்கிரீட் தூண்கள் அமைப்பதற்கு பதிலாக ஒரு தூண் மட்டும் அமைத்தால் போதும் என்று நினைப்பார்கள். அதுவும் தவறானது. சுவரில் பாரத்தை ஏற்றும்போது அதுவும் கான்கிரீட் தளத்தின் வலிமையை குறைப்பதாக அமைந்துவிடும்.
* மொட்டை மாடியில் இருக்கும் பக்கவாட்டு சுவர்கள் மீது சுமையை ஏற்றாமல் நான்கு தூண்களை அமைத்து அதன் மீதே தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும்.
* தொட்டியின் பக்கவாட்டு சுவர்கள் நீர் கசியாத வண்ணம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல் குழாய்கள் பதிக்கப்படும் பகுதியிலும் நீர்க்கசிவு ஏற்படாதவாறு பூச்சுவேலைகளை மேற்கொள்ள வேண்டும்.
* தற்போது பிளாஸ்டிக் தொட்டிகள் அதிக அளவில் சந்தையில் கிடைக்கின்றன. அவைகளும் அதிக இடங்களில் பயன்படுத்தப்பட்டுகின்றன. அந்த தொட்டியையும் மொட்டை மாடியின் தரைத்தளத்தில் அப்படியே வைத்துவிடக்கூடாது. கான்கிரீட் சுவர் எழுப்பி அதன் மேல்பகுதியில் தான் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொட்டியில் இருக்கும் தண்ணீரின் மொத்த கொள்ளளவால் கான்கீரீட் தளத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
No comments:
Post a Comment