பஞ்சாப்பில் நடத்தப்பட்ட கண் அறுவை சிகிச்சை முகாமில், 60 பேருக்கு கண்பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் குர்தாஸ்பூர் என்ற இடத்தில் செயல்படும் தனியார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில், சிகிச்சை செய்து கொண்டவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர் அதிகம் ஆவர்.
இவர்கள், அம்ரிஸ்டர் மாநிலத்தின் அருகே உள்ள ககோ மஹால் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் கட்டவிழ்த்தபோது, கிட்டத்தட்ட 60 பேருக்கு பார்வை பறிபோயிருந்தது. முதலில் 14 பேருக்கு மட்டுமே கண்பார்வை பறிபோய்விட்டது என்று கூறப்பட்டது.
தற்போது 60 பேருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது.
இதுகுறித்து மாநில அமைச்சர் அனில் ஜோசி கூறுகையில், சுத்தமில்லாத இடத்தில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
60 பேருக்கு பார்வை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment