பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுகவை வெளியேற்றியதில் முக்கிய பங்கு வகித்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியும் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது பாஜக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்தது வைகோவின் மதிமுக. அப்போதிருந்தே மதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
அதே நேரத்தில் தமிழக பாஜகவினர் சுப்பிரமணியன் சுவாமி பற்றி கண்டுகொள்ளாமலும் இருந்து வந்தனர்.
வைகோவும் கூட, யார் அந்த மனிதர்? அவர் அந்த கட்சியில்தான் இருக்கிறாரா? என்றெல்லாம் கேள்வி கேட்டு வந்தார். லோக்சபா தேர்தலில் மதிமுக தோல்வி அடைந்தது. அப்போதும் சுப்பிரமணியன் சுவாமி மதிமுகவை விட்டுவைக்கவில்லை. சகட்டுமேனிக்கு கிண்டலடித்து ட்விட்டர் பதிவுகளைப் போட்டு வந்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற வேண்டும்.. இல்லையெனில் தூக்கி எறியப்படுவார் என்று ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவு போட்டார்.
ராஜாவின் கொலைமிரட்டல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஒருமையில் பேசினால் வைகோ பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று உச்சகட்டமாக ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்தார்.
வெளியேறிய மதிமுக இந்த நிலையில் சென்னையில் நேற்று கூடிய மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமி நினைத்தது போலவே, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது.
பாமகவுக்கு சு. சுவாமி குறி தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி குறி வைத்திருக்கிறார். இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
தலித் விரோதி மேலும் “விடுதலைப் புலிகள் ஆதரவு அனாதை’ “தலித் விரோதி” என்றும் ராமதாஸை விமர்சித்து தமது அடுத்த சித்து விளையாட்டைத் தொடங்கியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. பாமகவின் எதிர்வினைதான் எப்படி இருக்குமோ?
காரணம் என்ன? ஈழத் தமிழர் பிரச்சனை விவகாரத்தில் பாமகவும் மத்திய அரசை குறை கூறி வருகிறது. அத்துடன் பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில்தான் சுப்பிரமணியன் சுவாமி இப்படி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment