சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் முடிந்தால் தம்மை கைது செய்து பாருங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ரா சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்காக அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர், இந்த மிரட்டலை கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், முடிந்தால் தம்மையும் கைது செய்துபார்க்கட்டும் எனவும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷாக்கு சவால் விடுத்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன முறைக்கேடு தொடர்பாக மேற்குவங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ராக்கு கடந்த மாதம் 21-ம் திகதி, சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால் மருத்துவ காரணங்களால் ஆஜராவதில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்று அவர் கூறிவந்த நிலையில், சால்ட் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார்.
பின்னர் விசாரணைக்கு பிறகு அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


No comments:
Post a Comment