உலகின் மிகப்பெரிய, அதிநவீன விமான நிலையம் துபாயில் 3200 கோடி அமெரிக்க டொலர் செலவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக இயங்கிவரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகிறது.
32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை கிலோமீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம், 2020-ம் ஆண்டு 120 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாகவும், சுமார் 200 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையிலும் உருவாகவுள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த புதிய விமான நிலையம், உலகின் மிகப் பெரியதும், அதிநவீன வசதிகள் கொண்டதாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment