அரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, பூஜா இருவரும் சகோதரிகள். கடந்த வெள்ளிக்கிழமை தங்கள் கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக நின்று இருந்தனர் அப்போது அங்கு வந்த குல்தீப், மோஹித், தீபக் ஆகிய வாலிபர்கள் சகோதரிகளை கேலி பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
பஸ் வந்ததும் சகோதரிகள் பஸ்சில் ஏறி கொண்டனர் தொடர்ந்து பஸ்சிலும் அந்த வாலிபர்கள் ஏறினார்கள்.தொடர்ந்து சகோதரிகளை கேலி பேசுவதும், சில்மிஷத்தில் ஈடுபடுவதுமாக இருந்தனர். சகோதரிகள் அந்த வாலிபர்களை தொடர்ந்து எதிர்த்து வந்தனர் ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லைமீறி அந்த சகோதரிகளுகு முத்தம் கொடுக்க முயன்றனர்.
பலமான எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அடங்கவில்லை இதனால் சகோதரிகள் தாங்கள் வைத்து இருந்த பெல்டால் வாலிபர்களை தாக்கி உள்ளனர்.இதனால் கோபம் அடைந்த வாலிபட்கள் ஆபாச வார்த்தைகளை கூறி சகோதரிகளை தாக்கினர். ஒருவன் ஒரு சகோதரியின் கைஅயை பிடித்து கொள்ள ஒருவன் சகோதரியின் கழுத்தை நெரித்தான்.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டு இருந்த போது சக பயணிகள் கண்டும் காணாதது போல் இருந்தனர் யாரும் உதவிக்கு வரவில்லை. குறிப்பாக டிரைவர் கண்டெக்டர் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வாலிபர்களை ஓடும் பஸ்சில் இருந்து சகோதரிகள் துரத்தி அடித்தனர். பின்னர் வீட்டிற்கு சென்ற சகோதரிகள் தங்கள் பெற்றோர்களிடம் விவரத்தை கூறினர். தொடர்ந்து சகோதரிகளின் தந்தை ராஜேஷ் குமார் சோனாபெட் காவல் நிலையத்தில் புகார் கூறினார்.
இதை தொடர்ந்து வாலிபர்கள் 3 பேரும் கைது செய்யபட்டனர்.அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டுஉள்ளது.
இந்த நிலையில் சகோதரிகளிடம் வாலிபர்கள் பஸ்சில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதை பயணி ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து உள்ளார். அது சோஷியல் மீடியாக்களில் வெளியிடபட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment