மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நான் பேசும்போது, பிரதமர் மோடியை விமர்சனம் செய்தேன். அந்த விமர்சனம் நியாயமான விமர்சனம். அந்த விமர்சனத்தை நான் தொடர்ந்து செய்வேம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் இனத்தை அழித்த இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்னொரு நாட்டில் நடைபெறும் தேர்தலில் இன்னார் வெற்றி பெற வேண்டும் என்று நமது நாட்டின் எந்த பிரதமரும் வாழ்த்தியது கிடையாது. இதன் மூலம் நரேந்திர மோடி, பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்தி விட்டார். இதைத்தான் பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இப்படி வாழ்த்து கூறுவதற்கு பிரதமர் மோடி தனிப்பட்ட நபர் கிடையாது. 120 கோடி மக்களின் பிரதிநிதி அவர். சுப்பிரமணியசுவாமி, ராஜபக்சவுக்கு இந்திய நாட்டின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படியே போனால் காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள் போலிருக்கிறது.
இப்படி பேசுவதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் கண்டிக்கவில்லை. தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அது சுப்பிரமணியசுவாமியின் கருத்து சுதந்திரம் என்கிறார். அப்படி என்றால் அவரது பேச்சை தமிழிசை சவுந்தரராஜன் நியாயப்படுத்துகிறாரா? இன்னொருவர் காரைக்குடியைச் சேர்ந்தவர், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளரான ராஜா. அவர் நேற்று கூறியிருக்கிறார்.
வைகோ இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் எங்கும் பாதுகாப்பாக போக முடியாது. எனவே அவர் தனது நாவையும், வாயையும் அடக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா தொண்டர்கள் அடக்குவார்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ம.தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்த முயன்றனர். இதையறிந்த நான் யாரும் போராட்டம் நடத்தவோ, உருவ பொம்மைகளை எரிக்கவோ கூடாது என்றும், அப்படி செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இதற்க்கு தமிழகத்தில் பல தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் வைகோ யாரும் கொந்தளிக்க கூடாது என்று குறிப்பிட்டு இருப்பது அவர்களுக்கான திட்டமிடல் என்று புரிந்து கொள்ள முடிகிறது என்று சமூக ஆர்வலர்கள் குறிபிடுகிறார்கள்
No comments:
Post a Comment