பாஜக கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இனியும் நீடிக்கக்கூடாது: காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். மார்த்தாண்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலைமையோடு ஜனநாயகத்தை பேணும் வகையில் மதசார்பற்ற நல்லாட்சி அமைய, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க பாடுபட்டேன். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசை அகற்றுவதற்காக அத்தகைய பொருத்தமான கட்சி பாஜகவால் முடியும் என்பதால், அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
ஆனால், அது தவறு என்பது இப்போது தெரிகிறது. பாஜக கூட்டணியில் இருந்து ம.தி.மு.கவை வெளியேற்ற சுப்பிரமணிய சாமி செயல்படுகிறார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைகோவை மிரட்டி வரம்பு மீறி பேசுகிறார். வைகோ தனது சொந்த நலத்திற்காகவோ, கட்சி நலத்திற்காகவோ பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. வைக்கோ இனியும் பாஜக கூட்டணியில் நீடிப்பது, அவரது கெளரவத்திற்கும், போர்க் குணத்திற்கும் சரியானது அல்ல. அவர் இனியும் தேசிய ஜனதா கூட்டணியில் நீடிக்கக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment