ஆம்னி பஸ்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
சென்னையில் இருந்து, வெளி ஊர்களுக்கு பெரும்பாலான மக்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எனவே அந்த ஆம்னி பஸ்களில் பயணிகள் நலன் கருதி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தார்கள். அதன் விவரம் வருமாறு:–
கண்காணிப்பு கேமரா
* ஆம்னி பஸ்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
* ஜனவரி 10–ந் தேதிக்குள் அனைத்து ஆம்னி பஸ்களிலும் கேமரா பொருத்த வேண்டும். பஸ் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள சன் கிளாஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்.
* டிரைவர்கள் போதையில் பஸ்களை ஓட்டுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
* டிரைவர்களை பணி அமர்த்தும்போது, அவர்கள் பற்றிய முழு விபரங்களையும் விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டும். வழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பதையும், விசாரிக்க வேண்டும். டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பஸ்களை ஓட்டிச் செல்லும்போது, டிரைவர்கள் செய்யும் ஒழுக்கக்கேடான மற்றும் குற்ற செயல்களுக்கு, பஸ் உரிமையாளர்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.
இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment