சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதில், ‘ஃப்ளாட் பைலிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு வக்கீல்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கு ஆவணங்களும் பெருகி கொண்டே போகிறது. இந்த பிரச்னையை தீர்க்க ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள் ளோம். இதுவரை மனுக் களை தாக்கல் செய்யும் போது மடக்கிய நிலையில் மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். இந்த நிலை மாற்ற திட்டமிடப்பட்டு, திங்கட்கிழமை முதல் ஃப்ளாட் பைலிங் முறையை (மனுவை மடிக்காமல் வைக்கும் திறந்த முறை ) பின்பற்றப்படும். வக்கீல் ஃப்ளாட் பைலிங் முறையில் தங்கள் வழக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என குறிப்பிட்டார். அதன்படி இந்த ஃப்ளாட் பைலிங் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி நேற்று உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்குகள், அப்பீல் வழக்குகள், ஜாமீன் வழக்குகள் ஆகியவை ஃப்ளாட் பைலிங் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வக்கீல்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வக்கீல்கள் குமாஸ்தாக்கலும் வழக்குகளை ஃப்ளாட் பைலிங் முறையில் தாக்கல் செய்தனர். இதுபற்றி சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ் கருத்து கூறும் போது, தலைமை நீதிபதி வேண்டுகோளை ஏற்று நேற்று ஃப்ளாட் பைலிங் முறையில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளோம். இது ஆரம்ப கட்டம் தான். வக்கீல்கள் தங்கள் குறைகளை என்னிடம் தெரிவித்தால் அதை தலைமை நீதிபதியிடம் தெரியப்படுத்துவேன். இந்த முறையை வரவேற்கிறேன். இதன் மூலம் கோப்புகள் அழியாமல் இருக்கும் என்றார்.
பெண் வக்கீல்கள் சங்க தலைவர் நளினி கூறும்போது, இந்த முறையை வரவேற்கிறேன். வக்கீல்கள் அனைவரும் இதை வரவேற்கிறார்கள். இது நல்ல முறைதான். கோப்புகளை அழியாமல் இருக்கும் என்றார். வக்கீல் ரமேஷ் கூறுகையில், ‘‘ ஃப்ளாட் பைலிங் முறையில் வழக்கு ஆவணங்கள் பாதுகாக்கப்படும். இந்த முறையை நாங்கள் வரவேற்கிறோம் என்றார். வக்கீல்கள் மூத்த குமாஸ்தா ராமன் கூறும் போது நான் பல ஆண்டுகளாக வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறேன். பழைய முறையின்படி வழக்குகளில் உள்ள ஆவணங்கள் அழிந்துவிடும், தற்போது பேட் முறை எளிதாக உள்ளது . உச்ச நீதிமன்றத்தில் உள்ளது போல இந்த முறை உள்ளது இதை வரவேற்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment