தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அறிவியல், தொழில்நுட்பம் பரப்புதலுக்கான தேசிய கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் 2014 -ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வருகிற டிசம்பா; 7,8,9 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை அருகே லெனாவிலக்கு மவுன்சீயோன் பொறியியல் கல்லூரியில் ‘காலநிலை மற்றும் வெப்பநிலையை புரிந்து கொள்வோம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இம் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை அறிவியல் இயக்கஅலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்புக்குழுக் கூட்டத்துக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன் தொடக்கி வைத்துப்பேசினார்.
இதில்,‘அறிவியல் இயக்கம் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் பேசுகையில், குழந்தைகளிடையே அறிவியல் மனப்பாண்மையை ஏற்படுத்துவதற்கும், அறவியல் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கும் அறிவியலைக் கொண்டு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதன்மூலம் 10 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு ஆய்வுதுறையில் ஈடுபடுத்த முடியும் என்றார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ என்ற தலைப்பில், மாநில துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசியது: இந்த மாநாட்டில் சுமார் 200 ஆய்வுக்கட்டுரைகளை குழந்தை விஞ்ஞானிகள் சமர்ப்பிக்க உள்ளனர். இந்திய கணித அறிவியல் மைய விஞ்ஞானி முனைவர் ஆh;.ராமானுஜம், விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரபலமான விஞ்ஞானிகளும், 60-க்கும் மேற்பட்ட அறிவியல் பேராசிரியர்களும், கலந்து கொள்கின்றனர். அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், அறிவியல் பரிசோதனைகள், தொலைநோக்கிகள் மூலம் வான்நோக்குதல், குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியல் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, நடமாடும் கோளரங்கம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களிலிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை விஞ்ஞானிகள், 200 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டைப் பார்வையிட புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவுதெரிவித்தார்.
தொடர்ந்து, மவுன்சீயோன் பொறியியல் கல்லூரித் தலைவர் கே. ஜெயபரதன் செல்லையா, இயக்குநர் ஜெ. ஜெய்சன் முதல்வர் டி.பாலமுருகன், பதிவாளர் நிக்சன்அசாரியா,ஆடிட்டர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.முத்தையா, பிலிம் சொசைட்டிநிர்வாகி எஸ்.இளங்கோ, ஒளிப்பதிவாளர் செல்வா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தநிர்வாகிகள் பேசினர்.
இதில், வரவேற்புக்குழுவின் தலைவராக கே. ஜெயபரதன் செல்லையா, துணைத் தலைவர்களாக ஜெ.ஜெய்சன், டி.பாலமுருகன், கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், டாக்டர் சலீம், கல்வியில் கல்லூரி முதல்வா; சுப்பையா பாண்டியன், ஆடிட்டா; தியாகராஜன், என்.கண்ணம்மாள், செயலராக எம்.வீரமுத்து, பொருளராக கா.ஜெயபாலன் உள்பட 150 பேர் கொண்டகுழு அமைக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment