காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த மறைந்த ஜி.கே மூப்பனார் அவர்கள் பிற்காலத்தில் கருத்துவேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸை துவக்கினார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அக்கட்சியை கழைத்துவிட்டு காங்கிரஸில் இணைத்துக்கொண்டனர். ஜிகே மூப்பனாரின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு வந்த அவரின் வாரிசு ஜிகே வாசன் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்காற்றிவந்தார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் புதிய இயக்கம் தொடங்கப்படும் எனவும். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இயக்கத்தின் பெயர் கொடி மற்றும் செயல் திட்டம் வெளியிடப்படும் என ஜி.கே,வாசன் அறிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் பிறக்கும் என தெரிகிறது
No comments:
Post a Comment