மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இளம்பெண் கற்பழிப்பு
தானே திவா பகுதியை சேர்ந்த இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ஜேக்கப் வில்லியம்ஸ் (வயது56) என்பவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இளம்பெண் தனியாக இருந்த நேரத்தில் டாக்டர் ஜேக்கப் வில்லியம்ஸ் குளுக்கோஸ் பாட்டிலில் மயக்க மருந்து கலந்து இளம் பெண்ணுக்கு செலுத்தினார். இதையடுத்து இளம்பெண் மயங்கியவுடன் டாக்டர் அவரை கற்பழித்துள்ளார். மயக்கம் தெளிந்தும் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த பெண் உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் கடந்த 2103–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26–ந் தேதியன்று நடந்தது.
ஆயுள் தண்டனை
போலீசார் நடத்திய விசாரணையில் டாக்டர் ஜேக்கப் வில்லியம்ஸ் இளம்பெண்ணை கற்பழித்தது உறுதியானது. இதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து தானே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இது குறித்து தானே கோர்ட்டில் நீதிபதி யு.எம் நந்தேஷ்வர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் டாக்டர் ஜேக்கப் வில்லியம்ஸின் குற்றம் நிரூபிக்க பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
No comments:
Post a Comment