இனிய இதய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
தகுதியும் திறமையும் ஆர்வமும் கொண்ட பல முஸ்லிம் பட்டதாரி மாணவ-மாணவியர் வசதியற்ற காரணத்தால் IAS, IPS, IRS, IFS முதலான உயர்பணிகளுக்கு உரிய முறையான பயிற்சியை மேற்கொள்ளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களுக்கு முறையான முழுமையான பயிற்சியை இத்துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்க S-IAS Academy முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தைப் பற்றி www.s-ias.org என்ற இணைய தளத்தில் தாங்கள் அறிந்துகொள்ளலாம் உணவு மற்றும் உறையுள் 9 மாதங்களுக்கு
மாதம் ரூ. 6000/ வீதம் ரூ. 54,000/ ஆக மொத்தம் ரூ. 84,000/ நமது தஃபர்ரஜ் அமைப்பைச் சார்ந்த சகோதரர்கள் தங்கள் அமைப்பின் சார்பில் ஐந்து பேரைத் தத்தெடுத்துள்ளதனை இங்கு பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனைப் போன்று பிற அமைப்புகளைச் சார்ந்த சகோதரர்கள் தங்கள் அமைப்பின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் தத்து (SPONSORSHIP) எடுத்துக் கொண்டால் அதிக எண்ணிக்கையில் நமது சமுதாயக் கண்மணிகள் நாட்டின் உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ளவியலும். இன்ஷா அல்லாஹ் நிறைய பேர் IAS,IPS,IFS,IRS முதலான பணியிடங்களைப் பெறுகிற வாய்ப்பைப் பெறுவர்.
சமுதாயத்தின் முன்னேற்றம் அரசின் உயர் பணிகளை அடைவதிலும் இருக்கிறதென்ற உள்ளார்ந்த கருத்தை நன்குணர்ந்த தாங்கள் இவ்விஷயத்தில் உடனடிக் கவனம் செலுத்தி உதவ முன்வரப் பணிவன்போடு விழைகிறோம் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 17 முதல் தொடக்கம் பெறவுள்ளன. ஆதலினால் உடன் ஆவன செய்துதவுக.
வல்ல அல்லாஹ் தங்களுக்கு ஈருலக நன்மைகளை நிறைத்து
வழங்கத் துஆ செய்கிறோம்...
நன்றி... வஸ்ஸலாம்,
அன்பு, சேமுமு
.
(பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி)
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
தலைவர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்
செயலாளர், எஸ்- ஐஏஎஸ் அகாடெமி
ஆசிரியர், இனிய திசைகள், மாத இதழ்

No comments:
Post a Comment