கோயம்பேடு பஸ் நிலையத்தில் 30 பவுன் நகைகள் இருந்த சூட்கேசை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். சென்னை அண்ணாநகர் கிழக்கு ஆர்வி.நகரை சேர்ந்தவர் முருகேசன் (50). சென்னையில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் அதிகாரி. இவரது மனைவி பாமா (45). தேனியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த பாமா நேற்று அரசு பஸ்சில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு காத்திருந்த முருகேசன் மனைவியை அழைத்து செல்ல ஒரு ஆட்டோவை பிடித்தார். அந்த ஆட்டோவில் சூட்கேஸை வைத்தபோது அங்கு இருந்த டிராபிக் போலீசார் வந்து, ஆட்டோவை விரட்டியடித்து உள்ளனர்.
இதனால் டிரைவர், ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து வேகமாக சென்றுவிட்டார். சூட்கேசில் 30 பவுன் நகை இருந்ததால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர்.சிறிது தூரம் சென்றபிறகு ஆட்டோவில் சூட்கேஸ் இருப்பது டிரைவருக்கு தெரியவந்ததால், உடனடியாக பஸ் நிலையத்துக்கு வந்து பார்த்துள்ளார். சூட்கேசை விட்டவர்கள் அங்கு இல்லை என்றதும் பிரிபெய்டு ஆட்டோ சென்டரில் சூட்கேசை ஒப்படைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் சென்றுவிட்டார்.
அந்த சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (49) இன்று காவல் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை தெரிவித்தார். இதையடுத்து, தவற விட்ட தம்பதியிடம் சூட்கேஸை ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் நேர்மையை போலீசாரும் தம்பதியினரும் பாராட்டினர்
No comments:
Post a Comment