ஐதராபாத்தில் உள்ள பல்கழைக்கழக விடுதி ஒன்றில் மாணவி ஒருவர், 5 மாணவர்களால் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத் தார்நாகா பகுதியின் இக்லு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்துவரும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31ம் திகதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் இருக்கும் தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் விடுதி அறையில் நண்பர் இல்லாததால், பக்கத்து அறையில் தங்கி இருக்கும் மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.
அந்த மாணவர்கள் தங்களது அறையில் மது விருந்து நடத்திக் கொண்டு இருந்தனர். விருந்தில் கலந்து கொள்ளும்படி டெல்லி மாணவியை அழைத்துள்ளனர். மிகவும் வற்புறுத்தியதால் விருந்தில் அவர் கலந்து கொண்டார்.
விருந்து முடிந்ததும் போதை மயக்கத்தில் இருந்த மாணவியை 5 மாணவர்களும் கற்பழித்தனர்.
இதுகுறித்து அந்த மாணவி உஸ்மானியா பல்கலைக்கழக பொலிசில் புகார் செய்தார். இதற்கிடையே கற்பழிப்பு தகவல் பரவியதும் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, அனந்த புரத்தைச் சேர்ந்த நிதின்(25), கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ராஜநரசிம்பா ஆகிய 2 மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் 3 மாணவர்களை பிடித்து விசாரித்து விடுவித்து விட்டனர். அரசியல்வாதிகளின் மகன்கள் என்பதால் பொலிசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டார்கள் என்று மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment