மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.Dr.M.H ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கிவந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு பிரச்சினை காரணமாக நவம்பர் 1-ந் தேதி முதல் அந்த ஆலையை மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல தொழிலாளர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பட்டு மீதமுள்ள சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா தொழிற்சாலை ஒரு நாளைக்கு 6 லட்சம் வீதம் மாதத்துக்கு 1 கோடியே 30 லட்சம் மொபைல் போன் களை தயாரித்து வந்தது. இந்த தொழிற்சாலை திடீரென்று மூடப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் அந்நிறுவனத்தை சார்ந்து உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
எனவே, இந்த நோக்கியா தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த முன்வர வேண்டும். அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த தொழிற்சாலையை பொறுப்பேற்று நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
அதேபோல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறையும் இப்பிரச்சினையில் தலையிட்டு முடப்படவுள்ள நோக்கிய தொழில்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment