ஸ்மார்ட் போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளம் அல்லது கவனச் சிதறல் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட் போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் சுமார் 9,500 பங்கேற்பாளர் களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில், 67 சதவீதம் பேர், தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் குறியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 69 சதவீதம் பேர் ஏற்கனவே செய்துகொண்டுள்ள வேலைகளை மேலும் சிறப்பாகச் செய்யப் புதிய வழிகளைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட் போன்கள் நேரத்தை மிச்சமாக்குவதாகவும், ஒரு வாரத்தில் சராசரியாக 5 மணி நேரம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்மார்ட் போன் வாங்க இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. அப்படியே ஸ்மார்ட் போன் பயனாளிகள் உங்கள் செயல்திறனையும் சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment