தாழ்த்தப்பட்டவர்களும், சூத்தி ரர்களும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. சாத்திரம் அனுமதிக்கவில்லை என்று கூறிய பூரி சங்கராச்சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பூரி சங்கராச்சாரியாரை எதிர்த்து டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் பூரி சங்கராச்சாரியார் உருவப் பொம்மையை எரித்தனர்.
கோவில் என்பது தூய்மையாக இருக்க வேண்டிய ஓர் இடமாகும். இங்கு தூய்மைப் பணியாளர்களுக்கு என்ன வேலை,? வர்ணாஷ் ரமம் கூறியத்தை தெளிவாகப் பின்பற்றவேண்டும் என்று பூரி சங்கராச் சாரியார் பேசி உள்ளார்.
ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்க ராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதை யில் 16-ஆவது அத்தியாயத்தில் வர்ணாஷ்ரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர்களுக்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும், இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.
அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்? வர்ணாஷ்ரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப்படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறியதாவது: சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்திரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறியிருந்தார்.
சங்கராச்சாரியாரின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஞாயிறு (19.10.14) தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஜார்கண்ட் காவல்துறை பூரி சங்கராச்சாரியார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப்பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக்கிறது என்று பல்வேறு அமைப்புகள் சங்கராச்சாரியாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கிழக்கு டில்லியின் பல்வேறு சமூக அமைப் பின் தலைவர்கள் ஒன்று கூடினர். பிறகு சங்கராச் சாரியாரின் உருவப் பொம்மை தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
கான்பூர் டில்லி முக்கிய சாலையில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் சங்கராச்சாரியாரை உடனடியாகக் கைது செய்யச் சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர் கழகம், தலித் சமூக அமைப்பு, அகில பாரதிய சபாய் மஸ்தூர் காங்கிரஸ் மற்றும் வால்மிகி மஸ்தூர் சங் போன்ற அமைப்புகள் டில்லியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. டில்லி மாநகராட்சி தூய்மைப்பணி தொழிலாளர் கழகத்தின் தலைவர் சஞ்சய் கேலத் கூறும் போது சமூகத்தில் கல்வி கற்று மருத்துவர்களாகவும், இந்திய அரசு ஆட்சிப் பணியாளர்களாகவும் (அய்.ஏ.எஸ்) மற்றும் அரசியல் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கும் தலித் துகளை மிகவும் கீழ்த் தரமாக தூயமையற்றவர்கள் என்று கூறிய சங்கராச்சாரியை நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர் என்ற செய்தி வருகிறது. சமூகத்தில் ஒருவர் தீண்டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா? என்று கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அனல் கக்கப் பேசினார்கள்.
நன்றி : நவஜோதி
No comments:
Post a Comment