Latest News

அமெரிக்க வாழ் இந்தியருக்கு அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி விருது


அமெரிக்க வாழ் இந்திய மாணவரான சகீல் தோஷிக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபிட்ஸ்பர்க் பகுதியில் குடியேறியிருக்கும் இவர் மின் பாதுகாப்பு சாதனத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்,

மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு, இந்த மின் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் சாதனம் கார்பன் டை ஆக்சைடு மாற்றுகிறது கரியமலவாயுவை குறைக்கிறது. அவரின் இந்த சாதனையை பாராட்டி அமெரிக்காவின் டிஸ்கவரி எஜூகேஷன் என்ற அமைப்பு அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் வழங்கி கவுரவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் ஜெயகுமார் என்பவருக்கு காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டறிந்தார். இதற்காக அவர் 3வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் 9 பேர் போட்டியிட்ட நிலையில், சகீல் தோசிக்கு அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.