இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் மூளை வளர்ச்சி குன்றிய பாலஸ்தீன சிறுவன் ஒருவனை துன்புறுத்திய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வெளியான இந்த காணொளியில் அந்நாட்டை சேர்ந்த 11 வயது மூளை பாதிக்கப்பட்ட சிறுவனை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் இருவர் கைகளையும், கண்களையும் கட்டி துன்புறுத்தி உள்ளனர்.
இச்சிறுவனின் தந்தை வீரர்களுடன் பேசி சமாளித்து சிறுவனை மீட்கும் வரை சிறுவன் துன்புறுத்தப்பட்டுள்ளான். மேலும் அருகில் உள்ள இஸ்ரேல் வாழ் மக்கள் இதனை ஆதரித்து கூச்சலிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment