அமெரிக்காவில் பெண் ஒருவர் வாழ ஆசையிருந்தும் தனது நோயின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான்(Oregon) மாகாணத்தை சேர்ந்த பிரிட்னி மேனார்ட்(Brittany Maynard Age-29) எனும் பெண் கடந்தாண்டு டேன்(Dan)என்ற நபரை திருமணம் செய்து பல கனவுகளுடன் இருந்துள்ளார்.
ஆனால் கடந்த ஜனவரியில் அவருக்கு மிகுந்த தலைவலி ஏற்படவே, அவரது கணவர் டேன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பரிசோதனையில் பிரிட்னிக்கு மூளையில் கட்டி இருப்பதும் தெரியவந்ததையடுத்து, அவர் இன்னும் 10 வருட காலமே இருப்பர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சில தினங்களுக்கு பிறகு பிரிட்னியின் தலைவலி அதிகரிக்கவே அவரை மீண்டும் பரிசோதனை செய்ததில், எதிர்பார்க்காத வகையில் கட்டி உயிர்கொல்லி புற்றுநோயாக மாறி பிரிட்னியின் உயிரை விழுங்கி கொண்டிருந்துள்ளது.
இதனால் அவர் 14 மாதங்களுக்கு மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தது, பிரிட்னியின் தாய் மற்றும் கணவனை பேரதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பிரிட்னி கூறுகையில், நான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட புற்றுநோய் என்னை அணுஅணுவாய் கொன்று வருகிறது.
எனவே வரும் 30ம் திகதி வரவிருக்கும் என் கணவனின் பிறந்தநாளை மட்டும் கொண்டாடிவிட்டு, நவம்பர் 1ம் திகதி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் எனது மரண படுக்கையில் இசை ஒலிப்பதுடன், என் கணவரும் தாயும் இருக்க வேண்டும் என்றும் அவர்களின் மடியில் நான் இறக்க வேண்டும் எனவும் கண்ணீர் பொங்க கூறியுள்ளார்.
No comments:
Post a Comment