பிரித்தானியாவின் முக்கிய துறைமுகத்திற்கு உலகின் மிகப்பெரிய சொகசுக்கப்பல் வருகை தந்துள்ளது.
பார்ப்பதற்கே ஒரு குட்டி நகரம் போல் காட்சியளிக்கும் இந்த “ஓயசிஸ் ஆப் தி சீஸ்” (Oasis of the seas) என்ற பிரம்மாண்ட கப்பல், பிரித்தானியாவின் சவுதாம்டன் (Southtampton) துறைமுகத்தினை தற்போது வந்தடைந்துள்ளது.
பிரான்ஸை சேர்ந்த இந்த சொகுசுக்கப்பல் சுமார் 1,187 அடி நீளமும், 208 அடி அகலத்துடன் கட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் மட்டத்திலிருந்து 236 அடி உயரம் கொண்ட இக்கப்பல், 16 அடுக்குகள் கொண்டதாக அடுக்குமாடி மாளிகையாக காட்சியளிக்கிறது. இங்கு 12,000 செடி கொடிகள் வளர்க்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலை 9 பகுதிகளாக நிர்மானித்து பொறியியல் வல்லமையை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுகள், பலவித ருசியான உணவுகளை வழங்க பல்வேறு ஹொட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒரே சமயத்தில், மொத்தம் 6000 பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் என்ற பெருமையும் இந்த பிரம்மாண்ட கப்பலை சேரும்.
No comments:
Post a Comment