சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் அடைக்கப் பட்டுள்ளார்.அவரது தோழி சசிகலா,இளவரசி மற்றும் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் தங்களுக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடியும் பலனளிக்கவில்லை.
இதையெடுத்து மற்றொரு பிரபல வழக்கறிஞரான பாலி நாரிமன் உச்சநீதிமன்றத்தில் ஜெவின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
அந்த ஜாமின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
என்னை மீறி ஜாமின் கிடைத்துவிடுமா.. பார்க்கலாம் – சவால் விட்ட சு சாமி
இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியான தாம் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்க விடமாட்டேன் என்று சவால் விட்டிருந்தார் சுப்ரமணிய சாமி.
இன்று வெள்ளிக்கிழமை ஜெவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.இதையெடுத்து ஜெயலலிதா விரைவில் சிறையிலிருந்து விடுதலையாவார்.
சுப்ரமணியசாமியின் அத்தனை முயற்சியும் இந்த விஷயத்தில் பலனற்று போனது..!
No comments:
Post a Comment