உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் முதல்-மந்திரி மக்கள் மதவாத சக்திகளை தோற்கடித்துவிட்டனர் என்று கூறினார்.
உத்தரபிரதேசத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மைன்புரி பாராளுமன்றத் தொகுதிக்கும் கடந்த 13–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாகவே பதிவானது. உத்தரபிரதேசம் மைன்புரி பாராளுமன்ற தொகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ராஜினாமா செய்த தொகுதியாகும். இங்கு பா.ஜனதாவுக்கும், சமாஜ்வாடிக்கும் நேரடி போட்டி நடந்தது.
அதேபோல இந்த மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகிவிட்டதால் ராஜினாமா செய்த 11 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மைன்புரி பாராளுமன்றத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மூன்று தொகுதிகளில் மட்டும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றி குறித்து அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் மக்கள் பிரிவினை மற்றும் வகுப்புவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர். என்று கூறியுள்ளார்.
வகுப்புவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை மாநில மக்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் நல்லிணக்கும் மற்றும் சகோதரத்துவம் வேண்டும் என்ற எண்ணைத்தை வெளிக்காட்டியுள்ளனர். மதவாத சக்திகளை தோற்கடித்த மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத சக்திகள் வெறுப்பு பரப்பி உயரத்திற்கு செல்ல முயற்சித்தன. ஆனால் மக்கள் தங்களுடைய வாக்கை கொண்டு மதவாத சக்திகளை தோற்கடித்துள்ளனர். உத்தரபிரதேச அரசு மட்டுமே வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறது. தேர்தலை அடுத்தும் இந்த வழியில் சமாஜ்வாடி அரசு செயல்படும். பொறுப்புடன் செயல்படும். இப்போது நாங்கள் மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் சமாஜ்வாடிக்கு ஆதரவு அளித்துள்ளனர். என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநில மந்திரி சிவ்பால் பேசுகையில், வளர்ச்சியை நோக்கி மக்கள் மதவாத சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். என்றார்.
No comments:
Post a Comment