தஞ்சையில் அகில இந்திய அறுவை சிகிச்சை டாக்டர்கள் சங்க மையம் சார்பில் மாநில மாநாடு நேற்று நடந்தது. அகில இந்திய அறுவை சிகிச்சை டாக்டர்கள் சங்க தஞ்சை மைய தலைவர் டாக்டர் சாத்தப்பன் பேசியதாவது: புற்றுநோய் மிகவும் கொடிய உயிர்கொல்லி நோயாகும். நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் உரிய சிகிச்சையின்றி 3 லட்சம் பேர் இறந்து விடுகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்துவிட்டால் உரிய சிகிச்சை மூலம் நோயை கட்டுப்படுத்தி விடலாம்.
நவீன அறிவியல் சிகிச்சை முறையால் தற்போது ரேடியோ தெரபி, ஹீமோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகிய முறை களால் புற்றுநோய் குணப்படுத்தப்படுகிறது. புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய், மது அருந்துவதால் கல்லீரல் பகுதியில் புற்றுநோய், வெற்றிலை போன்ற பழக்கத்தால் வாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment