ஜேர்மனியில் சாலையில் நடந்து சென்ற நபரை பொலிசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் பெண்ணுடன் நபர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரிடம் பொலிசார் அடையாள அட்டையை கேட்டுள்ளனர்.
இதன்பின் அவரின் கை மற்றும் காலில் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர் மீது ஏறி நின்று அவரை மூன்று பொலிசார் மிதித்துள்ளனர்.
இதனை பார்த்த பொதுமக்கள், பொலிசாரிடம் கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பொதுமக்களின் கேள்விகளுக்கு பொலிசார் எந்த பதிலும் அளிக்கவில்லை.
மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment