தமிழகத்தின் இந்த 14 ரயில் நிலையங்களிலும் இனி இலவச ‘வை-பை’ கிடைக்கும்
தமிழகத்தில் சென்னை, நெல்லை உட்பட 14 ரயில் நிலையங்களில் வை-பை எனப்படும் இலவச இணையதள வசதி கிடைக்க உள்ளது.
நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், பயணிகளுக்கு புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒரு வசதிதான், ஏ-1 மற்றும் ஏ வகை ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள வை-பை இலவச இணையதள சேவையாகும்.
தமிழகத்தில் உள்ள ஏ-1, வகை ரயில் நிலையங்கள் என்றால், அவை சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகிய ரயில் நிலையங்களாகும்.
நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகியவை ஏ வகை ரயில் நிலையங்களாகும். எனவே இந்த 14 ஸ்டேஷன்களிலும் இலவச இணையதள வசதி கிடைக்கும். செல்போன், லேப்டாப் வைத்திருப்போருக்கு ரயில் நிலையத்தில் இனிமேல் இலவசமாக பொழுது போக வாய்ப்பு கிடைக்கும்.
பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில், இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த வசதி வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக ரயில் நிலையங்களில் வை-பை வசதி வருகிறது.
No comments:
Post a Comment