இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் போராளி களுக்குமிடையே நடைபெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து இரு தரப்பினரும் ராக்கெட் மற்றும் விமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர்.
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலுக்கு பலஸ்தினத்தில் பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 300 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியது. இதில், 20 பேர் இறந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த உக்கிரமான தாக்குதல்களில் இதுவரை 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை காசாவில் 750க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு இதுவரை எந்த நாடுகளும் கண்டனங்கள் தெரிவிக்க வில்லை . இதே போன்று இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தின மக்களை கொன்று அளித்து வருகிறது என்பது குறிப்பிட தக்கது தரை வழி தாக்குதலுக்கு அஞ்சி வான்வெளி தாக்குதலை மேற்கொண்டு உள்ளது என்று கூறபடுகிறது
No comments:
Post a Comment