Latest News

பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

பிரதமர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.

இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக – கலாச்சார அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணி யாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் சோச லிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த் திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பது தான்.

ஆனால், பிரதமர் அலு வலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணைய தளத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்த இணையதளத்தில் தனது சித்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: சங் அமைப்பின் சித் தாந்தம் என்பது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூல மாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய் வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற் றுவதே. இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணி யாற்றுவதற்கான வழி முறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

பிரதமர் அலுவல கத்தில் புதிய இணைய தளத் தில், முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப் பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புட னான தனிப்பட்ட நபர் களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ் வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.

அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வந்தது. உதா ரணத்திற்கு, 2001 ஆகஸ்ட் டில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம் தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச்செய லாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக் கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப் பட்ட நிகழ்ச்சி என்ற அளவி லேயே இருந்தது. அந்த நிகழ்ச்சி தொடர் பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலை வர் இனாம்தார் தொடர் பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தக வலும் உண்டு. இனாம் தாரை, வழக்குரைஞர் சாகேப் என்றும் குறிப்பிடு வார்கள்.

அவரைப்பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ் சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதா நாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப் பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அது தொடர்பு டைய ஆர்எஸ்எஸ் ஊழியர் களை பாதுகாப்பதற்கும் இதே வழக்குரைஞர் சாகேப் தான் வாதாடினார் என்பது தனிக் 


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.