கடும் கண்டனத்திற்குரிய காடையர்களின் கண்மூடித்தனமான காட்டுமிராண்டிச்செயல் தமிழர்கள் (இந்து / முஸ்லீம்) மீது
காலங்காலமாக அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது; அடக்குவாரின்றி.
மே 29, 1915 – ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் களைமிகு மலைநகரமாம் கண்டியில் முதன்முதலாய் முஸ்லீகள் மீது
கைவரிசையைக் காட்டினான் காடையன். கண்டியில் இருந்த பள்ளிவாசல்களை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கிய போது இருதரப்பினருக்கும் மூண்ட கலவரத்தில், இப்பொழுது நடந்தது போலவே பள்ளிவாசல்கள் சூறையாடப்பட்டன, வீடுகள் மற்றும் வணிக மையங்கள் தீக்கிரையாயின.
ஒரு ஊரில் தொடங்கிய கலவரம் தீவுநாடு முழுவதும் பரப்பப்பட்டு 116 இடங்களில் பெரும்கலவரமாய் உருவெடுத்து ஏறத்தாழ 9 நாட்கள் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதில் முஸ்லீம்கள், 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; 189க்கும் அதிகமானோர் பலத்த காயமுற்றனர்; 4 பெண்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர்; 4075 வீடு மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன; 250 வீடு மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன; 17 பள்ளிவாசல்கள் முற்றிலும் எரிக்கப்பட்டன; 86 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.
அன்றைய ஆங்கிலேய (சிலோன்) அரசு, வன்முறை வெறியாட்டத்தை ஒடுக்க இராணுவத்தின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது.
காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் வன்முறையாளரைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட, தூண்டிவிட்ட அன்றைய சிங்களவெறியர்கள், அரசியல்வாதிகள், துறவிகள் மற்றும் சில அமைப்பின் தலைவர்களை, நாட்டின் ஒற்றுமைக்கெதிராக சதித்திட்டம் தீட்டியதாக ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையிலடைத்தது.
பின்னாளில் பிரதமராக இருந்த D.S செனநாயக்க மற்றும் அவரது சகோதரர்கள் D.C. செனநாயக்க, F.R. செனநாயக்க உட்பட ஏராளமானோர் மீது வழக்கு தொடுத்து சிறையூட்டப்பட்டது.
இன்று வேலியே பயிரை மேய்கிறது….. உலகம் வேடிக்க்கை பார்க்கிறது வழக்கம் போலவே……
-புது சுரபி
No comments:
Post a Comment