புதுவையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பொலிசார் பலரை கைது செய்துள்ளனர்.ரெட்டியார்பாளையம் அருள்நகர் 3–வது தெருவில் உள்ள ஒரு பங்களாவுக்கு அடையாளம் தெரியாத மனிதர்கள் பலர் வந்து செல்வது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு அந்த பங்களாவை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்–இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் அந்த பங்களாவில் பெரிய அளவில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து அந்த வீட்டில் இருந்த கீழ்சாத்தமங் கலத்தை சேர்ந்த கலைச் செல்வி, புதுவை அரசு ஊழியர்கள் குமார், கலைச்செல்வம் மற்றும் கொல்கொத்தாவை சேர்ந்த இளம் அழகி ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்த விசாரணையில், அந்த வடமாநில அழகி பெங்களூரில் இருந்து கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
பொலிசாரிடம், கைதான கொல்கொத்தா அழகி அளித்த வாக்குமூலத்தில், நான் வீட்டு வேலை செய்வதற்காக கொல்கொத்தாவில் இருந்து பெங்களூர் வந்தேன்.
அங்கு விடுதி ஊழியரான குமார் என்பவருக்கு, எனது அழகையும், நிலையையும் அறிந்த அவருக்கு விபரீத எண்ணம் உருவாகியது.
அவர் என்னை ஏமாற்றி விடுதிக்கு அழைத்து சென்று அறையில் அடைத்தார். பிறகு என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்.
பின்னர், புதுவைக்கு என்னை கடத்தி வந்து, என்னுடன் சேர்ந்து கைதாகியுள்ள கலைச்செல்வியிடம் ஒரு தொகையை பெற்று கொண்டு விற்றுவிட்டார்.
மேலும், முக்கிய பிரமுகர்கள், வசதி படைத்த வாலிபர்கள் என பலர் இரவும், பகலும் என்னை விரும்பி தேடி வந்தனர் என்றும் தற்போது பொலிசார் பிடியில் சிக்கி விட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment