உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சார கூட்ட மேடையில் ராமர் படம் ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி அருகே உள்ள பைசாபாத்தில் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மோடி எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பேன் என மறைமுகமாக குறிப்பிட்டதுடன், ராமராஜ்ஜியம் மலர செய்வேன். அதாவது இந்து ராஜ்யம் அமைய நடவடிக்கை எடுப்பேன் எனகுறிப்பிட்டிருந்தார். மேலும் பிரச்சார கூட்ட மேடையில் ராமர் வில் அம்புடன் இருப்பது போன்ற படத்தையும் ஒட்டியிருந்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. அதில் இந்து கடவுளை அரசியல் ஆதாயத்திற்காக மோடி பயன்படுத்தி வருகிறார். மேலும் நாட்டில் மதரீதியான பிரிவினையை உண்டாக்கும் நோக்கில் அவரது பேச்சுக்கள் அமைந்து வருகிறது.மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் இது குறித்து மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தரப்பிரதேச அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் அகமதாபாத்தில் மோடி வாக்களிக்க வாக்குச் சாவடிக்கு செல்லும் போது தாமரை சின்னத்துடன் சென்றது குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் மோடி மீது ஒரு வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் ராமர் படத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதற்கும், பிரிவினையை தூண்டும் விதம் பேசியது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் மோடி மீது ஒரு வழக்கு பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment