தமிழக அரசின் உத்தரவாதத்தை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
கட்டாயக் கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகள், எழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மாணவர்களுக்கான செலவுத் தொகையை அரசே செலுத்தும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் செலவுத் தொகையை அரசு தரவில்லை எனக் கூறி, இனிமேல் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் நேற்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், ”எழை மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசின் வேண்டுகோள் குறித்து தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்” என்றனர்.
இதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் வேண்டுகோளை ஏற்று ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதென்று முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment