அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை திராவிடன் மருத்துவமனை ஆகியோர் இனைந்து நடத்திய காது - மூக்கு - தொண்டை தொடர்பான இலவச மருத்துவ முகாம் இன்று [ 04-05-2014 ] காலை நமதூர் தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதில் திராவிடன் மருத்துவமனையின் காது - மூக்கு - தொண்டை சிறப்பு மருத்துவர் பிரின்ஸ் பீட்டர் தாஸ் M.S. [ ENT ] தலைமையில் பங்கேற்ற மருத்துவ குழுவினர் பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கினார்கள். மேலும் இம்முகாமில் பங்கேற்று ஆலோசனை பெற்றவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
முன்னதாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் MMS சேக் நசுருதீன், PMK தாஜுதீன், ஜபருல்லா, அப்துல் ரெஜாக், நஜ்முதீன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தார்கள். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment