அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) சார்பாக 18 ம் ஆண்டாக நடத்தும் மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று காலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக துவங்கியது.
நேற்றைய தினம் துவங்கிய முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி அதிரையில் திடீரென பெய்த மழையால் தடைபட்டது. விளையாட்டு மைதானமும் சேதமடைந்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய WCC இளைஞர்கள் ஆடுகளத்தை சரிசெய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மைதானம் சரியானதை தொடர்ந்து இன்று முதல்நாள் ஆட்டம் துவங்கியது.
இன்றைய முதல் ஆட்டமாக மதுக்கூர் லெவன்ஸ்
அணியினரும், பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியினரும் விளையாடினர். இதில் மதுக்கூர் லெவன்ஸ்அணியினர் 24 ரன்கள் வித்தியாசத்தில் பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியை வென்றனர். முன்னதாக டாஸ் வென்ற பட்டுக்கோட்டை ஈகிள் கிரிக்கெட் அணியினர் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், தாஜுல் இஸ்லாம் சங்க துணைதலைவர் PMK தாஜுதீன், மனோரா பாலி டெக்னிக் கல்லூரியின் செயலர் NMS ஜெஹபர் அலி, திமுக பட்டுகோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் ராஜிக், ரெமி ரெஸ்டாரண்ட் உரிமையாளர், மலேசியா உணவக அதிபர் சகாபுதீன், பட்டுகோட்டை கேலக்சி கேட்டரிங் கல்லூரி உரிமையாளர், சலீம் டிரேடர்ஸ் உரிமையாளர், மாஸ் கலெக்சன் உரிமையாளர் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.
மாநில அளவில் தலைசிறந்த 16 அணிகள் மோத இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய மாலை நேர ஆட்டமாக WCC YELLOW அணியினரும், SYDNEY BOYS அணியினரும் மோத இருக்கின்றனர். இன்றைய முதல் ஆட்டத்தை காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.
செய்தி தொகுப்பு : அப்துல் வஹாப்
புகைப்படங்கள் : மஹ்சீன் ( WCC )
அதிரையில் நேற்று பெய்த மழையால் மைதானத்தை சீரமைக்கும் WCC இளைஞர்கள்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment