பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
எங்கள் இறைவனே எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே
யாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய எங்களைப் கருனையுடன் நோக்கி
எங்கள் பிழைகளை மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே
மிக்க மன்னிப்போனும்,
அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.
அமீரக TIYAவின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை
மகரிப் தொழுகைக்கு பிறகு சகோதரர் N.முகமது சேக்காதி அவர்கள் இல்லத்தில் TIYAவின் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அமீரக TIYAவின் தலைவர் N. முகமது மாலிக் தலைமையிலும், ஏனைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இனிதே துவங்கியது.
சகோதரர் S,P.
ஹாஜா அவர்கள் கிராத் ஓதினார்.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள்
குறித்து தலைவர் N.
முகமது மாலிக் விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து TIYAவின் உறுப்பினர்களுக்கான கேள்வி நேரம்
ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு உறுப்பினர்களின் கருத்துகளும் பெறப்பட்டு, இதற்குரிய விளக்கங்களும், வாக்குறுதிகளும் பொறுப்பாளர்களால்
வழங்கப்பட்டது.
இறுதியில் கீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டுக்கான நமது மஹல்லாவில் உள்ள ஏழை மாணவ
மாணவிகளுக்கு சீருடை,
கல்வி கட்டணம் போன்றவைகள் வழங்குவது எனவும்,
2. தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் தாயக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நமது மஹல்லாவில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இந்த கல்வி ஆண்டு விடுமுறையில் உள்ள நமது மஹல்லாவை
சார்ந்த கல்லூரி மாணவர்கள் மூலம் உடனடியாக செய்து முடிப்பதற்கு தாயக TIYA நிர்வாகிகளிடம் கேட்டுக்கொள்வதென முடிவு
செய்யப்பட்ட்து.
3. நமது மஹ்ல்லாவில் உள்ள விதவை ம்ற்றும் முதியவர்களுக்கான ஊக்க தொகையாக் மாதம்
தோறும் 500ரூபாய் விதம் சுமார் 10 நபர்களுக்கு தாயக நிர்வாகிகள் வழங்கி
வருகினறனர்,
மேலும் இவற்றை விரிவுபடுத்தும் நோக்கில்
கூடுதலாக இன்னும் 10
நபர்களையும் சேர்த்துக் கொண்டு இயன்றளவில்
உதவிகளை அவர்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
4. நமது மஹல்லாவில் உள்ள அபுல் ஹோட்டல் அருகில் உள்ள பிராதன நான்கு பக்க
சாலைகளின் பாலம் பழுதடைந்து இருப்பதாகவும் இன்னும் சில இடங்களில் இது போன்று
ஏற்பட்டு உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்க்கு 16, 17வது வார்டு உறுப்பினர்களிடம் அதிரை
பேரூராட்சி தலைவரிடமும் இது தொடர்பாக அமீரக TIYAவின் மூலம் ஒரு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி வேண்டுகோள் வைப்பதென
தீர்மானிக்கப்பட்டது.
5. நமதூரை சார்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற G.R. பப்ளிகேஷன் ஆங்கில தேர்வு எழுதி முதல் மூன்று
இடங்களை பிடித்து நமதூருக்கு பெருமை சேர்த்துதந்த மாணவிகளை நாம் பாராட்டியாக
வேண்டும் 100க்கு 98 மதிப்பென் எடுத்து முதலாம் இடம் பிடித்து கோல்டு மெடல் வாங்கியுள்ளார், 100க்கு 96 மதிப்பென் எடுத்து இரண்டாம் இடமும், 100க்கு 94
மதிப்பென் எடுத்து மூன்றாம் இடமும்
பிடித்துள்ள இந்த மூன்று மாணவிகளையும் TIYAவின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பு இரண்டாம் இடமும், மூன்றாம் இடமும் பிடித்துள்ள மாணவிகள்
இருவரும் நமது மஹல்லாவை சார்ந்தவர்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த
மூன்று மாணவியையும் பாராட்டும் விதமாக இனிவரும் காலங்களில் மேலும் பல சாதனைகளை
மாணவர்களும் மாணவிகளும் பெற்று நமதூருக்கு பெருமையை சேர்த்துதர வேண்டுமென்று இந்த
மாணவிகள் மேலும் பல சாதனை படைக்க வேண்டுமென்று நோக்கில் TIYAவின் சார்பாக சாதனை படைத்த மாணவிகளுக்கு
மேலும் ஊக்கம் கொடுக்கும் விதமாக மூன்று மாணவிகளுக்கும் TIYA சார்பில் பரிசு வழங்குவதென
தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் துவாவுடன் இனிதே நிறைவுபெற்றது.
என்றும்
அன்புடன்,
அமீரக TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகள்
No comments:
Post a Comment