Latest News

அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு கி.வீரமணி எச்சரிக்கை

ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிக்கையினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,   ‘’தேர்தல் முடிவுகள் நாளை வருமுன்பே - ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடி - முழுப் பெரும்பான்மையுடனோ, அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாக ஊடகங்களின் உதவியோடு திட்டமிடப்படுகின்ற நிலையில், வரும் செய்திகள் எப்படிப்பட்ட பச்சை இந்து மதவெறித்தனத்தின் வெளிப்பாடான ஹிந்துத்து வத்தை அமுல்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியாக அமைய வேண்டுமென ஆர்.எஸ். எஸ். கட்சித் தலைமை, மோடிக்கு ஆணை பிறப்பிக்கத் தொடங்கி விட்டது.
மதயானை வரும் பின்னே!
“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது பழைய (பழ) மொழி!
மத யானை வரும் பின்னே, மதவெறியை பரப்பி நாட்டை மீண்டும் 1992க்கே கொண்டு செல்லும் ஆணைகளின் ஆர்ப்பரிப்பு ஓசை வரும் முன்னே” என்பது புதிய அரசியல் மொழியாகும்!

இன்றைய “இந்து” ஆங்கில நாளேட்டில் முதற் பக்கத்தில் வந்துள்ள தலைப்புக்கள் மேற்கூறிய கருத்துக்களைத் தெளிவாகப்பறை சாற்றுகின்றன:
எம்.ஜி. வைத்யா கூறுகிறார்”
“modi must deliver on ram temple: -rss leader m.g.vaidya wants progress on article 370, uniform civil code”
-இந்துவில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

இதைச் சொன்ன ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வி கேட்கிறார்; “ஏற்படும் என்று எண்ணு கிற பி.ஜே.பி. அரசு செயல்படுவதற்கு இது தடையாக அமையாதா?” அந்த பதில்ஆர்.எஸ்.எஸ். கொள் கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக் (பெரும்பாலும் அனைவரும் பார்ப்பனர்களே) பதில் கூறியு ள்ளார்.

“நான் அப்படி நினைக்கவில்லை; இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க., தலைமையும் எல்லாம் ஒரே சம வயதுடையவர்கள்; எனவே எங்களால் தந்திரமாக முன்பு தந்திரமாக இருந்த பா.ஜ.க. அரசுகளைவிட சமாளிக்க முடியும்” அது மட்டுமல்ல மோடி அரசு மற்றும் சில ஆர்.எஸ்.எஸ்., முக்கிய அடிப்படை கொள்கைகளையும் செயல்படுத்தும் என்றும் கூட சொல்லியிருப்பது அடுத்து நாட்டுக்கு, வரவிருக்கும் ஆபத்தும் சூழ்நிலையும் பற்றிய மணியோசைகள் ஆகும்! நாகபுரி மூத்த பேராசிரியரின் கருத்துஇதுவும் நம்முடைய கருத்தல்ல; அதே செய்தியில் கீழே உள்ள ஒரு மூத்த பேராசிரியர் ஜம்புல்கர் கூறிய கருத்து:
“they sangh parivar may even go on their own and try to fast-track these issues, but it will be interesting to see if modi budges under this pressure.  but the dangers of a communal flare -up will always be there now”
“ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் மிக வேகமான முறையில் போகக் கூடும்; இம்மாதிரி பிரச்சினை விரைந்து முடிக்க மோடி இந்த நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செயல்பட்டால், வகுப்புக் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும்” என்று நாகபுரிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ஜம்புல்கர் (இவர் அவர்கள் அரசியல் விஞ்ஞானம் போதிக்கும் கல்வியாளரானபேராசிரியர்).

எப்படிப்பட்ட அபாய அறிவிப்புக்கள் பார்த்தீர்களா? மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் சிந்தனைக்கு... இவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தரத் துடிக்கும், அதன் மூலம் தங்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிடும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களே, முதல்வர்களே, இந்த நிலைமை நாட்டில் ஏற்பட நீங்களும் காரணமாகி,வரலாற்றுப் பழி ஏற்கப் போகிறீர்களா?

காலந் தாழ்ந்தாவது வருந்துவீர்! யோசியுங்கள்: கொள்ளிக்கட்டை என்று தெரியாமலோ, புரியாமலோ அதை எடுத்து தலையைச் சொரிய ஆசைப்பட்ட, அப்பாவித்தனமாக வரலாறு அறியாது வாக்களித்த தீராத இணையத்து விளையாட்டு விடலைகளே, காலந் தாழ்ந்தாவதுவளர்ச்சி என்ற ‘மயக்க பிஸ்கெட்’ பற்றிப் புரிந்து வருந்துங்கள்.

“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” - குறள் (435)’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.