சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை திமுக வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என செய்திகள் வெளியாகி இருக்கிறன. பாஜக தேசிய தலைவர்கள் ஆதரவு கோரி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின .இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. மலைச்சாமியும் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் எனக் கூறியிருந்தார்.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளரான தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, அப்படி கருத்து தெரிவித்த காரணத்துக்காகவே மலைச்சாமியை கட்சியைவிட்டே நீக்கிவிட்டார். இதனால் மோடி தரப்பு அதிருப்தி அடைந்தது. பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெளியில் இருந்து திமுக ஆதரிக்கப் போவதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியாகத் தொடங்கியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், எங்களுக்கு அப்படி ஒரு யோசனையோ திட்டமோ எதுவும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கட்சிக்குத்தான் ஆதரவு என்பது நிலை. அப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவை என எங்களிடம் கோரிக்கை வைத்தால் அதுபற்றி எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி விவாதிக்கும் என்றார்.
No comments:
Post a Comment