அதிரை தாருத் தவ்ஹீத் வருடந்தோறும் நடத்தி வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் இந்த வருடமும் மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடை பெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மணிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிசிறப்பிக்கும் நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும் என்ற தலைப்பில் உளவியல் சிறப்புரையும் வரும் 17-மே-2014 சனிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அதிரை தக்வாப் பள்ளி அருகில் நடைபெறவுள்ளது.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அதிரை தாருத் தவ்ஹீத் அழைக்கிறது.
தகவல் : அதிரை அமீன்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment