சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 10 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. பாமக 3 தொகுதிகளிலும், மதிமுக 2 தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் கட்சி இடம் பெற்றது. நீலகிரி நீங்கலாக 38 தொகுதியில் போட்டியிட்டது பாஜக கூட்டணி 38ல் 2 வெற்றி இதில் பாஜக கன்னியாகுமரி தொகுதியிலும், பா.ம.க. தர்மபுரி தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற 36 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது. தேமுதிக 10 காலி இதில் கூட்டணிக்கு தலைமை தாங்கி அதிகபட்சமாக 14 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், மதுரை, நெல்லை ஆகிய 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. பாமக 3 காலி பா.ம.க. 8 தொகுதியில் போட்டியிட்டு தர்மபுரியில் வெற்றி பெற்றது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுவை ஆகிய 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மதிமுகவுக்கு 2 அவுட் ம.தி.மு.க. 7 தொகுதியில் போட்டியிட்டது. இதில் தேனி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதிகளில் டெபாசிட்டினை பறிகொடுத்தது.
No comments:
Post a Comment