அமெரிக்காவில் பறக்கும் பலூனில தீ பிடித்து 2 பேர் உடல் கருகி பலியாயினர். பலூன் தரையில் விழுந்தது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற 3 பலூன்களில் 2 பலூன்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு பலூன் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்து தரையில் விழுந்தது.
அந்த பலூனின் கூடையில் (பேஸ்கட்) அமர்ந்து சென்ற 3 பேரில் இரண்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை. மற்றொரு நபரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பேஸ்கட் எங்கு விழுந்தது என்பதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
தீப்பிடித்த அந்த பலூன் கரும்புகையுடன் கீழ்நோக்கி வருவதை நேரில் பார்த்த பார்வையாளர்கள் அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகிறது. விபத்து ஏற்பட்டதால் பலூன் திருவிழாவின் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
No comments:
Post a Comment