சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பயின்று 1168 மதிப்பெண் பெற்று சென்னையில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி எம்.சௌஜன்யா. இவர் ஆதி ஆந்திரர் வகுப்பை சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகள்.
மாணவியின் தந்தை மாலகொண்டைய்யா (50), கண்பார்வையற்றவர். மாதம்தோறும் அரசு தரும் 1000 ரூபாய் உதவி பணம் மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார்.
தாயார் 2007ம் ஆண்டு இறந்து விட்டார். தந்தையும் கண்பார்வையற்றவர். இந்நிலையில் வீட்டு வேலைகளையும் முடித்து இடைவேளையில் படித்து இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளார்.
தான் மேற்கொண்டு சிஏ படிக்க விரும்புகிறேன் என்று சௌஜன்யா தெரிவித்தார். இவருக்கு பிஎஸ்சி பயிலும் ஒரு சகோதரியும், பத்தாம் வகுப்பு பயிலும் தம்பியும் உள்ளனர்.
துப்புரவு தொழிலாளிகள் வசிக்கும் ஆடுதொட்டி பகுதியில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் வசிக்கிறார். அரசாங்கம் தரும் உதவி தொகை குடும்பத்திற்கே போதாத நிலையில் வறுமையான சூழ்நிலையில் 1168 மார்க்குகள் பெற்றுள்ளார்.
சென்னை மாநகராட்சி இவரது படிப்பு செலவை ஏற்று கொண்டாலும் வறுமையை போக்க நல்ல இதயங்கள் உதவினால் நலமாக இருக்கும்.
அவரது அப்பா பெயர்
மாலகொண்டய்யா
முகவரி
34,ஜோதி அம்மாள் நகர்
ஆலந்தூர் சாலை
சைதாப்பேட்டை
சென்னை-600015
தொலைபேசி எண்: 9600143448.
No comments:
Post a Comment