ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சேர்ந்த மக்கள் படகு மூலம் ஐரோப்பா கிளம்பினர். அவர்கள் லிபியா கடல் பகுதி வழியாக செல்கையில் திரிபோலியின் கிழக்கு பகுதியில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 40 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சஹாராவுடனான லிபியாவின் பாதுகாப்பற்ற கடல் எல்லைகள் மற்றும் இத்தாலி, மால்டா போன்ற நாடுகளுக்கு எளிதில் செல்லும் வழியாக அது இருப்பதால் வடக்கு ஆப்பிரிக்க நாட்டினர் இந்த வழியை பயன்படுத்துகிறார்.
கடந்த மார்ச் மாதம் தான் சட்டவிரோதமாக அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆப்பிரிக்காவில் இருந்து லிபியா வழியாக இத்தாலி சென்ற படகுகள் சிசிலியில் பிடிக்கப்பட்டன. அந்த படகுகளில் பயணித்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் இத்தாலிய ராணுவத்தால் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு லிபியாவின் கடல் வழியாக ஐரோப்பா செல்ல பலர் குற்றவாளி கும்பல்களுக்கு 1000 டாலர்களுக்கும் மேல் கொடுக்கிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து தூக்கிய பிறகு தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்க அரசு போராடி வருகிறது என்பது
No comments:
Post a Comment