சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் 8000 மைல் தூரம் கொண்ட ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 125 மைல் தூரம் கடலுக்கு அடியில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது. 8000 மைல் தூரம் கொண்ட இந்த பயணத் திட்டத்தில் கடலுக்கு அடியில் 125 மைல் தூரம் சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்லும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாட்களில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரயில் சைபீரியா, ரஷ்யா வழியாக சென்று பின்னர் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக அமெரிக்க மாகானமாகிய அலாஸ்காவை அடையும்.
அலாஸ்காவிலிருந்து மீண்டும் கனடா சென்று தரை வழியாக அமெரிக்க தலைநகரத்தை சென்றடையும் வகையில் இந்த ரயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
வான் வழியாக செல்வதற்குப் பதிலாக, இத்திட்டத்தின் மூலம் தரை வழியாகவே சென்றடையலாம் என்ற சிறப்பம்சம் கொண்ட திட்டமாக இது இருக்கும் என்று பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இது உலகின் மிக நீண்டதூர ரயில் பாதையாகத் திகழும். கடலுக்கடியில் 125 மைல் ரயில் பாதை அமைக்கப்பட்டால் இது உலகின் மிக நீண்ட தூரம் கொண்ட கடலுக்கு அடியிலான ரயில் பாதையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்பட வில்லை. அதிவேக ரயில் திட்டங்களில் உலக அளவில் சாதனை நாடாக விளங்கும் சீனாவின் நிதியுதவியின் மூலம் இத்திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் தற்பொழுது 6200 மைல் தூரத்திற்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது மேலும் 3000கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலுக்கான வடிவமைப்பை சீனா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment