மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாட்டு விமானபடை விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடிவந்தன. விமானம் எங்கும் கிடைக்காததால் யாராவதுவிமானத்தை கடத்திவைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதனைதொடர்ந்து இது தொடர்பாக மலேசிய தீவிர விசாரணை நடத்தியது. இந்த சூழலில் கடத்தப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில். விமானத்தின் பாகங்கள் போன்ற 20 பொருட்கள் மிதப்பது செயற்கைகோள் புகைப்படத்தில் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், விமானம் கடலில் விழுந்துருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனா, மலேசிய அரசு விமானம் குறித்து தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டியது. இதேபோல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் குற்றம்சாட்டினார். இதனைதொடர்ந்து கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் முயற்சி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அங்கு விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு, அதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. .இது குறித்து ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
மலேசிய விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக கழற்றிய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். எந்தவிததொலைதொடர்பு வசதியும் இல்லாத பாழடைந்த வீடுகளில் பயணிகளை பயங்கரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு உட்பட எந்த வசதியும் இன்றி பரிதவித்து வருகினறனர்.
No comments:
Post a Comment