அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை கொலை செய்து அட்டைபெட்டியில் அடைத்து வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்க மாநிலமான யுட்டாவில், குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து விரைந்த வந்த பொலிசார், குறித்த குழந்தையின் உடலுடன் அட்டைப்பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வேறு ஆறு குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்தனர்.
இதனைதொடர்ந்து இந்த ஏழு குழந்தைகளின் தாய் என்று கருதப்படும் மேகன் ஹண்ட்ஸ்மன்(வயது 39) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டு கால கட்டத்தில் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பின்னர் அவைகளைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இந்தக் குழந்தைகளின் உடல்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அவை எப்படி இறந்தன என்பதைக் கண்டறிய இந்த சோதனைகள் நடத்தப்படும்.
அவரது வீட்டின் கார் கேரேஜில் இந்தப் பெட்டிகள் இருந்ததாகவும்,அவரிடமிருந்து பிரிந்திருக்கும் அவரது கணவர் டாரென் வெஸ்ட் முதல் குழந்தையின் உடலை முதலில் கண்டுபிடித்துப் பொலிசாருக்குத் துப்புத் தந்ததாகவும் கூறப்படுகிறது
No comments:
Post a Comment