மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையே குண்டுகளை வைத்த சதிச்செயல் அம்பலமாகியுள்ளது . உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர்.பீட்டர் ரமேஷ் குமார் நீதிமன்றத்தில் மதுரை SP யின் இரண்டு கடிதங்களை தாக்கல் செய்தார். அதிர்ச்சியூட்டும் இக்கடிதத்தில் காவல்துறையில் உள்ள சிலர் தனது இன்பார்மர்கள் மூலம் பல்வேறு சமூகவிரோத செயல்களை செய்வது மட்டுமல்லாமல், வெடிகுண்டுகள் வைக்கும் காரியங்களிலும் ஈடுபட்டு வருவதை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
கடந்த 2011 முதல் மதுரையை சுற்றி இதுவரை எடுக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 15 குண்டு, போலிகுண்டு, பட்டாசு குண்டுகளின் பிண்ணனியில் சிறப்பு பிரிவு காவல்துறையினர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சிறப்பு பிரிவிற்கு மதுரைக்கு தலைமை வகித்தது ADSP மாரிராஜனும், ADSP கார்த்திகேயனும் ஆவார்கள். இப்படி இவர்களே குண்டுவைத்து விட்டு அப்பாவி முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இவர்களுக்கு காவல்துறை இன்ஃபார்மர்களும் உதவியுள்ளனர்.
மதுரையை சுற்றி சிறப்பு பிரிவு போலிஸ் குண்டு வைக்கிறது என சந்தேகப்பட்ட SDPI வழக்கறிஞரணி, இவ்வழக்குகளின் விசாரணையை CBI க்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து அது நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது
நன்றி
இந்நேரம்
No comments:
Post a Comment