காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானதுக்கான தேடுதல் பணிகளை வழிநடத்துக்கின்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள், சீனக் கப்பல் ஒன்று இரண்டு முறை சமிக்ஞை ஒலியைக் கேட்டிருந்த இடத்துக்கு தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும் விமானங்களையும் திசைதிருப்பியுள்ளதாக கூறுகின்றனர்.
அந்த சீனக் கப்பலில் இருந்த கருவிகளைக் காட்டிலும் நவீனமான கருவிகள் தற்போது அவ்விடத்துக்கு செல்லக்கூடிய கப்பல்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
சீனர்கள் சமிக்ஞையைக் கேட்க முடிந்திருப்பது ஒரு முக்கியமான மற்றும் ஊக்கம் தருகிற விஷயம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஆனாலும் இந்த சமிக்ஞை காணாமல்போன விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்துதான் வந்ததா என தற்போதைக்கு சொல்லவதற்கில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை பெர்த் நகருக்கு மேற்கிலுள்ள வேறொரு கடற்பரப்பில் தண்ணீருக்கடியில் இருந்து மூன்றாவதாக வேறொரு ஒலிச் சமிக்ஞையைக் கேட்டதாக ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று கூறுகிறது.
விமானத்துடைய பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவியின் மின்-கலங்கள் விரைவில் தீர்ந்துவிடும் என்பதால் அதனை அதற்குள் அவசரமாக தேடவேண்டியுள்ளது.
-BBC
No comments:
Post a Comment