காரைக்குடி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழக அமைப்பாளர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "ரகுராம் ராஜன் கமிட்டி பல்வேறு குறியீடுகளின் கீழ் தரவரிசையில் குஜராத்திற்கு 12 ஆவது இடத்தை அளித்துள்ளது. இந்தியாவின் தலை சிறந்த மாநிலங்களின் வரிசையிலும் குஜராத் மாநிலம் இல்லை. மோசமான மாநிலங்களின் வரிசையிலும் இல்லை. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர் பதவிகளில் பணியாற்றிவர்கள் ஓய்வுக்கு பின்னர் அரசியலுக்கு வரலாம். அவர்களும் இந்திய குடிமகன்கள் தான்.
அவர்கள் அரசின் ஒய்வூதியத்தை பெறுவதிலும் தவறில்லை. ஆனால் உயர்ந்த நிலை பதவிகளை வகித்து நாட்டின் ரகசியங்களை பாதுகாக்க வேண்டிய, பாதுகாத்து வந்த உயர் அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற ஒரு சில நாட்களில் அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலிலும் போட்டியிடுவது சட்டப்படி சரியாக இருந்தாலும் இது விபரீத போக்கிற்கு வழி வகுக்கும். இதற்கு ஏதேனும் வழி தேடவேண்டும். பாஜக வின் 42 பக்க தேர்தல் அறிக்கையை படித்தவுடன் சோர்வு தான் ஏற்படுகிறது. சில பக்கங்களை படிக்கும் போது ஆழந்த கவலை ஏற்படுகிறது. சில பக்கங்களை படிக்கும் போது நகைப்பு ஏற்படுகிறது" என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment